புதுடில்லி: 2020-ம் ஆண்டிற்கான பணக்கார இந்தியர்களில் முதலிடத்தை தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது.
அமெரி்க்காவின் முன்னணி பத்திரிகையான போர்ப்ஸ், 2020ம் ஆண்டின் முதல் 10 பணக்கார இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 36.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் தரவரிசையில் முதலிடத்தையும், தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் தமனி, 13.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், 11.9 பில்லியன் டாலர் நிகர மதிப்பில் மூன்றாம் இடத்திலும், உதய் கோட்டாக், 10.4 பில்லியன் டாலர் நிகர மதிப்பில் நான்காம் இடத்திலும், கௌதம் அதானி 8.9 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 5 வது இடத்திலும் உள்ளனர்.
கௌதம் அதானி 8.9 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 5 வது இடத்திலும் உள்ளனர்